Advertisement

Main Ad

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கும், பாராட்டு விழாவும்

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு AIMS நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி. பிரிவு ஏற்பாட்டில் நிறுவளத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.தில்சான் தலைமையில் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நேற்று (17) நடைபெற்றது. 
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் உள்ளிட்ட பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், AIMS நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் க.பொ.த. சாதாரணப் தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் அதி விசேட சித்தியடைந்த 7 மாணவர்களும், 8 பாடங்களில் அதி விசேட சித்தியடைந்த 10 மாணவர்களும் மொத்தமாக 17 மாணவர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.





HTML Comment Box is loading comments...