Advertisement

Main Ad

பொதுபலசேனாவை கண்டித்து புத்தளத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


பொதுபலசேன செயலாளர் முஸ்லிம்களின் புனித அல்குர்ஆனை அவமதித்து கருத்து தெரிவித்தமையை கண்டித்து புத்தளம் நகர  மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எவ்வித அமைப்புகளும் அழைப்பு விடுக்காத நிலையில் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரி விரிவுரையாளர் முபாறக் மௌலவி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
புத்தளம் நகர பொது மக்கள் சிலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பொது பல சேன செயலாளரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் இங்கு முன் வைக்கப்பட்டது.  
VAT
DSC03263 DSC03264 DSC03266 DSC03267 DSC03269 DSC03270

HTML Comment Box is loading comments...