கல்குடா முஸ்லிம் பிரதேச மாணவர்களுக்கிடையிலான இஸ்லாமிய ஒன்று கூடல்
நிகழ்வு நேற்று சனிக்கிழமை 26.04.2014 கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின்
கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் ஜமாஅத்தின் தலைமையக கட்டிடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கிழங்கையின் பிரபல மார்க்க அறிஞர் எம்.எல்.எம்
முபாறக் (மதனி) அவர்கள் கலந்து கொண்டு 'இன்றைய மாணவர் சமூகத்தின் எதிர்
காலம்' எனும் தலைப்பிலும், 'இஸ்லாத்தின் வளர்ச்சியில் இன்றைய இளைஞர்களின்
பங்கு' எனும் தலைப்பில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக
கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மத்(காஸிமி) அவர்களும்
உரையாற்றினர்.
இதன் போது ஜம்இய்யவின் செயலாளர் எஸ்.எச்.எம் அறபாத்(ஸஹ்வி) கல்குடா தௌஹீத்
ஜமாஅத்தின் கல்விப்பிரிவு இனைப்பாளர் எம்.பீ.எம்.நபீர்
ஆசிரியர்,தஃவாப்பிரிவு இனைப்பாளர் பசால் முஹம்மட் ஆசிரியர்,ஊடகப்பிரிவு
இனைப்பாளர் எம்.எஸ்.எம்.இப்றாஹிம் ஆசிரியர் உள்ளீட்ட ஜம்இய்யா நிருவாகிகள்
பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கான அனுசரனையினை இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் வழங்கி இருந்தது.
