பிரான்ஸின் பாரிஸ் நகரில் பண்டைய
தேவாலயமொன்றுக்கு அருகிலுள்ள தன்னியக்க இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற
சுற்றுலா பயணியொருவரை சுற்றி வளைத்த திருடர்கள் குழுவொன்று அவரிடமிருந்து
பணத்தை திருடிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிரிவி கண்காணிப்பு
கருவியில் பதிவாகியுள்ளது. 
பாரிஸ் நகரில் ரோபோ இனத்துவ குழுவை சேர்ந்த திருடர்கள் கொள்ளை மற்றும் வழிப்பறிகளில் ஈடுபடுவது வழமையாகவுள்ளது.
நொட்ரே டேம் தேவாலயத்துக்கும் லாவ்றி அருங்காட்சியகத்துக்கும்
இடையிலுள்ள தன்னியக்க பண இயந்திரத்தில் பணம் எடுக்கும் நடவடிக்கையில்
ஈடுபட்ட சுற்றுலா பயணியிடமிருந்தே திருடர்கள் பணத்தை களவாடிச்
சென்றுள்ளனர்.
மேற்படி திருடர்களில் இள வயதினரும் பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
பாரிஸ் நகரின் மத்தியிலிருந்து ரோமா இனத்தவர்களை அகற்றும் நடவடிக்கை
கடந்த வாரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
