Advertisement

Main Ad

பாரவூர்தி குடைசாய்ந்ததில் ஒருவர் பலி மூவர் படு காயம்

கிளிநொச்சி  கொமர்ஷியல் வங்கிக்கு முன்பாக இன்று காலை பாரவூர்தியொன்று   குடைசாய்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படு காயமடைந்துள்ளனர். 
 
விபத்தில் படு காயமடைந்த மூவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ் அதிபர்தெரிவித்தார்.
 
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விறகுகள் மற்றும் குடிநீர் போத்தல்களை ஏற்றிக்கொண்டு சென்ற இப்பாரவூர்தி மின்கம்பமொன்றுடன் மோதி குடைசாய்ந்ததிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 
 
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.