Advertisement

Main Ad

பொது பல சேனா அமைப்புக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும் – ஜனாதிபதி

20140426-215458.jpgஇனங்களுக்கிடையில் சமத்துவத்தை ஏற்படுத்த பொது பல சேனா அமைப்புக்கு எதிராக தான் நடாத்தும் போராட்டத்துக்கு ஜனாதிபதி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜாதிக பல சேனா செயலாளர் வட்டரக்க விஜித தேரர்.
தான் நேற்று முன் தினம் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட பின் மீண்டும் தன்னை ஜனாதிபதியே தொடர்பு கொண்டு சுகம் விசாரித்தததோடு தனது நடவடிக்கைகளை எந்தவித பயமுமின்றி தொடரும்படியும் அச்சுறுத்தல்களை கணக்கிலெடுக்காமல் பிரதேச சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும்படியும் உற்சாகமளித்துள்ள ஜனாதிபதி பொது பல சேனா அமைப்புக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் வாக்குறுதியளித்துள்ளதாகவும் விஜித தேரர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.