கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துசபை பஸ் ஒன்றுடன் சைக்கிள் ஒன்று மோதி நேற்று பிற்பகல் விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழ்ந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் மீதான பிரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதவான் முன்னிலையில்இன்று ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
