தேசத்திற்கு மகுடம் தொடருந்து, சமிஞ்சையை மீறி செயற்பட்டமையே பொத்துஹெர
தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கான
காரணம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக
தொடருந்து திணைக்கள சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து பளை நோக்கி பயணித்த தொடரூந்தும், வவுனியாவிலிருந்து
மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின தொடரூந்தும் ஒரே தண்டவாளத்தில்
பயணித்த நிலையில் விபத்துக்குள்ளாகின.
இதன்காரணமாக, 68 பேர் காயமடைந்ததுடன் இரண்டு தொடருந்தினதும் எஞ்சின்கள் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, 10 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
