நாரம்மல – கிரியுல்ல வீதியின் மட்டியகனே பகுதியில் இன்று காலை 6.10 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாரம்மல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.