கண் சிகிச்சை நிபுணர் சந்தித்து கண்ணைப்
பரிசோதிப்பதற்கு தேவைப்படும் பணம் மற்றும் நேரம் என்பவற்றைக் கண்
பரிசோதனைகளை மேற்கொள்வதை பலரும் பின்தள்ளிப் போடுவது வழமையாகவுள்ளது.
இந்நிலையில் இத்தகையவர்களுக்கு உதவும் வகையில் அமெரிக்க
கலிபோர்னியாவிலுள்ள ஸ்டார்ன் போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்
ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மூலம் கண்ணின் முன் மற்றும் பின்பக்க
புகைப்படங்களை இலகுவாக எடுப்பதற்கு வழிவகை செய்யும் இணைப்பு உபகரணமொன்றை
உருவாக்கியுள்ளனர்.
இந்த தொழில்நுட்பமான கண் கவனிப்பு சேவைகளை பெறுவதை அதிகரிப்பதுடன் கண்
கவனிப்பு தொடர்பில் மருத்துவர்கள் நோயாளிக்கு தூர இருந்து ஆலோசனை
வழங்கக்கூடிய வாய்ப்பை வழங்குவதாகவும் உள்ளதாக மேற்படி உபகரணத்தை
உருவாக்கும் செயற்கிரமத்தின் பங்கேற்ற ஸராக்போர்ட் மருத்துவ
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் ரொபேர்ட் சாங் தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பம் மூலம் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி கண்ணின்
விழி வெண்படலத்திலிருந்து மற்றும் விழித்திரையை துல்லியமாக படம் எடுக்க
முடியும் என அவர் தெரிவித்தார்.