இந்த சந்தேகநபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொத்தமாக 08 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தின் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டிருந்தது.
மோதலில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் குறித்த கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments