Advertisement

Main Ad

அசாத் சாலியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினேன் என்கிறார் ஹக்கீம், இல்லை என்கிறார் சாலி


அசாத் சாலியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினேன் என்கிறார் ஹக்கீம், இல்லை என்கிறார் சாலிஅசைக்க முடியாத ஒருவராக ஜனாதிபதி இருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது கூட்டமொன்று கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது.
அங்கு கருத்து வெளியிட்டபோதே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அசைக்க முடியாத ஒருவராக ஜனாதிபதி இருக்கிறார் என்ற ஒருவிதமான பார்வை இன்று இருக்கின்றது. எனவே அந்த ஜனாதிபதி இன்று பலமாக இருக்கின்றார் என்றால் அதற்கு காரணம் வேறு யாரும் அல்ல, 18 ஆவது சட்டதிருத்தத்தின் மூலம் ஒரு முறையல்ல எத்தனையோ முறைகள் ஜனாதிபதி தேர்தல் கேட்கின்ற ஒரு வரப்பிரசாதத்தை வழங்கி விட்டுதான் நாங்கள் அரசாங்கத்தில் இருக்கின்றோம். அதற்கு பிரதியுபகாரமாக எதையும் நாங்கள் அவரிடத்தில் சாஸ்டாங்கமாக விழுந்து கேட்கவில்லை.
அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து
நண்பர் அசாத் சாலி பயங்கரவாதியல்ல, அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கதை செய்வதென்பது மிக தவறான விடயம், பாதுகாப்புச் செயலாளர் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று பகிரங்கமாக சொன்னேன். அடுத்த நாளே பாதுகாப்பு செயலாளர் என்னுடன் சீறிவிழுந்தார், அடுத்தநாளே சீறி விழுந்தார் இவன் என்ன இப்படி கதைக்கிறான் என்று. நான் சொன்னேன் மன்னிக்க வேண்டும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னும் அமுலில் இருப்பதனை நியாயப்படுத்துவதனை பாராளுமன்றத்தில் செய்யவேண்டிய கடப்பாட்டில் இருப்பவன் நான். நீங்க இப்படி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வாரபோரவங்கள எல்லாம் புடிச்சு அடிச்ச அந்த தடைச் சட்டத்தை நீங்கள் துஸ்பிரயோகம் செய்கின்றீர்கள். என்பதனை நியாயபடுத்த முடியாத நிலையில் நான் இருப்பேன் என்பதை அவருக்கு துணிகரமாக சொன்னவன் நான்.
இதேவேளை தமது விடுதலை தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி கருத்து தெரிவித்திருந்தார்
அவருக்கு அவ்வாறு ஒன்றை செய்ய முடியும் எனறால் அது பெரிய விடயம். அரசாங்கத்தால் ஒருவர் கைது செய்யப்பட்டு அமைச்சரால் விடுவிக்க முடியும் என்றால் அது பெரிய விடயம். அசாத் சாலி கைது செய்யப்பட்ட போது கோட்டபாயவோடு கதைத்தாக அவர் சொல்கிகொண்டிருக்கின்றார். எநதவிதமான அழுத்தங்கள் வந்தாலும் அசாத்சாலியை விடுதலை செய்யப்போவதிலை என்று கோட்டபாய ராஜபக்ஸ கூறியதாக மவ்பிம பத்திரிகையில் செய்தி வந்தது உஙகளுக்கு நினைவிருக்கும். சர்வதேசத்தின் அழுத்தங்கள், நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் அழுத்தங்கள காரணமாக அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார். மக்கள் கடைகளை மூடி ஹர்த்தால் செய்தனர். கிழக்கு மாகாணத்திலும் கண்டியிலும் ஏனைய பகுதிகளிலும் கடைகளை மூடி போராட்டம் நடத்தினார்கள். அரசியல் மேடைகளில் அரசியல் தலைவர்கள் இது தொடர்பில் கதைத்தார்கள், சர்வதேசத்திற்கு சொன்னார்கள் அதனால் தான் அசாத் சாலியை விடுதலை செய்தார்கள். ரவூப் ஹக்கீம் கூறியதால் விடுதலை செய்யவில்லை எனறு நான் தெளிவாகக் கூறுகின்றேன்.

Post a Comment

0 Comments