Advertisement

Main Ad

பெரியகல்லாறு கடலில் தீர்த்தமாடியவர் சுழியில் அகப்பட்டு மரணம்

பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை சமுத்திரத்தில் நடைபெற்ற வேளையில் தீர்த்தமாடிய பக்தர் ஒருவர் கடல் அலை வாங்கலில் அகப்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
 
தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கடலில் இறங்கி தீர்த்தமாடிக் கொண்டிருந்தனர். அதேபோல 56 வயதான கணபதிப்பிள்ளை தேவராசாவும் நீராடிக் கொண்டிருந்த வேளையில் சுழியில் சிக்கி தத்தளித்தபோது அவரை அருகில் நீராடிக் கொண்டிருந்தவர்கள் கரை சேர்த்த போது வாயில் இருந்து வெண்ணிற நுரை தள்ளியதையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
 
கோட்டைக் கல்லாற்றை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பெரியகல்லாறு - 02, அன்னை வேளாங்கண்ணி வீதியில் வசித்து வந்த குடும்பஸ்தவராவார். ஆலயத்தின் 12 நாட்களும் தவறாமல் கலந்து கொண்ட பக்தரான இவர் தீர்த்தோற்சவ வேளையில் அகால மரணமடைந்ததை தொடர்ந்து பெரியகல்லாறு கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Post a Comment

0 Comments