Advertisement

Main Ad

நிந்தவூர் தொழில் பயிற்சி நிலைய த்தை அம்பாறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது!

ariff 

-எம்.எம்.ஏ. ஸமட்- 

நிந்தவூரில் அமைந்துள்ள இலங்கை தொழிற் பயிற்சி நிலையத்தின் தலைமைக் காரியாலயத்தை அம்பாறை நகருக்கு இடமாற்ற எடுக்கப்பட்டுள்ள முயற்சினைக் கண்டித்து இன்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின்போது என்னால்; முன்வைக்கப்பட்ட கண்டனப் பிரேரணை  சபையினால்  ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக  கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.
அம்பாறை மாவட்டம் மாத்திரமின்றி, கிழக்கு கரையோரப் பிரதேங்களில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் இளைஞர் யுவதிகள் இத்தலைமைக் காரியாலயத்தினால்; பெரும் நன்மையடைகின்றனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் பெரும்பாலானவை தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே உள்ளன.
17 வருடங்களுக்கும் மேலாக நிந்தவூரில் இயங்கி வரும்  இத்தலைமைக் காரியாலத்தை எந்தவொரு நியாயமான காரணங்களுமின்றி அம்பாறை நகருக்கு இடமாற்றுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் எந்தவொரு அரச நிறுவனத்தினதும் தலைமைக் காரியாலயம் இயங்குவதில்லை. இந்நிலையில,; இத்தலைமைக் காரியாலத்தை அம்பாறை நகருக்கு இடமாற்ற எடுக்கப்பட்ட முயற்சியானது தமிழ் பேசும் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்று எண்ணும் ஒரு சிலரின் மறைச் சிந்தனையின்  வெளிப்பாடாகும்.
அந்தவகையில். தொழில் பயிற்சி நிலையத்தின் தலைமையகத்தை அம்பாறை நகருக்கு மாற்ற எடுக்கப்பட்ட முயற்சி கண்டிக்கத்தக்கதெனவும் இதனை உடன் நிறுத்த கிழக்கு மாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எனது கண்டப் பிரேரனையின்போது முன்வைத்தேன்
சபையின் தலைவி ஆரியபதி கலபதியின் தலைமையில் இன்று காலை கூடிய சபை  அமர்வில் முன்வைக்கப்பட்ட இப்பிரேரனை ஏகமனதாக சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இது தொடர்பில் முதலமைச்சரினால் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவரும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் நிலையத் தலைமையகத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவதை நிறுவத்தற்கான உரிய நடவடிக்கைகளை சபை எடுக்குமெனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்  மேலும் குறிப்பிட்டார்