Advertisement

Main Ad

இலங்கை சர்வதேசத்தில் பிரச்சினைகளை சந்திப்பதற்கு பொதுபல சேனாவே காரணம் – ரவுப் ஹக்கீம்


சர்வதேச ரீதியாக இலங்கை பிரச்சினைகளை சந்திப்பதற்கு பொதுபல சேனா என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பே காரணம் என்று நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஏனைய மதங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதில் பொதுபல சேனா அங்கீகரிக்கப்படாத காவற்துறையினரை போல செயற்படுகிறது.
2012ம் ஆண்டு பொதுபல சேனா ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே இலங்கைக்கு பிரச்சினைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அந்த அமைப்பு ஏனைய மத ஸ்தலங்கள் மீது நடத்தி வரும் தாக்கதல்கள் காரணமாகவே சர்வதேச ரீதியாக இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என்று அவர் கூறி இருக்கிறார்.