மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ஜீ.சமரநாயக்க மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் உப தலைவர் அசேல சமரநாயக்க ஆகியோரே இந்த விபத்தில் காயடைந்துள்ளனர்.
கண்டியிலிருந்து பாணந்துரை நோக்கிச் செல்லும் தனியாஸ் பஸ் வண்டியும் கண்டி நோக்கிச் செல்லும் கெப் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தினால் கண்டி கொழும்பு வீதியில் சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் வீதிப் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கெப் வண்டியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
0 Comments