Advertisement

Main Ad

கம்பஹா நாரன்வலயில் வைத்து 6 பாடசாலை மாணவர்கள் பயங்கரமான ஒரு தொகுதி ஆயுதங்களுடன் கைது

பயங்கரமான ஒரு தொகுதி ஆயுதங்களுடன் ஒரே பாடசாலையைச்சேர்ந்த மாணவர்கள் அறுவரை கம்பஹா நாரன்வலயில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலான ஊழல் ஒழிப்பு பிரிவினராலேயே இவர்கள் இன்று 19-03-2014 கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடம்; ஐந்து பெற்றோல் வெடிகுண்டுகளும், சைக்கிள் இரும்புக் குண்டுகளும், மரத்திலான பொய்துப்பாக்கி, கூரான இரண்டு கத்திகள் மற்றும் வீச்சுக்கத்தி என்பன அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோல் குண்டு மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ளதாவும் கைது செய்யப்பட்ட அந்த பெண் குறித்த மாணவனின் தாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.