இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி இரவு கொச்சியிலுள்ள மீரா ஜாஸ்மினின் வீட்டில் இருவருக்கும் இரகசிய பதிவு திருமணம் நடந்தது.
இவர்களது திருமண நிகழ்ச்சிகள் இன்று திருவனந்தபுரத்திலுள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மணமகன் நேற்று, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில் அவர்,
எனக்கும், நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். சர்ச்சில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் எனது மனைவி எனக் கூறி பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து பிரச்சினை செய்வேன் என கூறிவருகிறார். எனவே எனது திருமண நிகழ்ச்சிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.எனக் குறிப்பிட்டுள்ளார்.போதிய பாதுகாப்பு வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது, இதற்கிடையே அனில்ஜான் டைட்டசுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது என்றும், முதல் மனைவிக்கு தெரியாமல் இந்த திருமணம் நடைபெறுவதால் தான் அந்த பெண் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

0 Comments