Advertisement

Main Ad

அக்கரைப்பற்று விபத்தில் வேன் பலத்த சேதம்!

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த வேன் வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறியதனால் விபத்துக்குள்ளாகி பலத்த சேதமடைந்துள்ளது.

 முதூரிலிருந்து பயணிகளை பொத்துவிலுக்கு ஏற்றிய வந்த வேன் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் முதூர் நோக்கிப் பயணிக்கயிலேயே இன்று அதிகாலை 4.00 மணியளவில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

பொத்துவில் -அக்கரைப்பற்று வீதியில் உள்ள வலைவில் உள்ள பாதைக்கட்டைகளை உடைத்து குடைசாய்ந்து வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனைச் செலுத்தி வந்த சாரதியும் மற்றும் ஒருவரும் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அக்கரைப்பற்றுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Post a Comment

0 Comments