Advertisement

Main Ad

அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரானிய யுத்த கப்பல்கள்


20140210-205034.jpg

ஈரானின் பல யுத்தக்கப்பல்கள் அமெரிக்க கடற்பரப்பு எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஈரானிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கலங்கள் தரித்து நிற்பதற்கு பதிலடியாக ஈரானிய யுத்த கப்பல்களை அமெரிக்க கடற்படை எல்லையை நோக்கி நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஈரானிய கடற்படை அதிகாரியான அட்மிரல் அப்ஷின் ரெஸாயீ ஹதாத்தை மேற்கோள் காட்டி ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு அருகிலிருந்து அத்திலந்திக் சமுத்திரத்தை நோக்கிய ஈரானிய யுத்த கப்பல்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அட்மிரல் ஹதாத் தெரிவித்துள்ளார். இந்நகர்வானது ஒரு சமிக்ஞையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வொஷிங்டனிலுள்ள தம்மை இனங்காட்ட விரும்பாத அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஈரானிய கப்பல்கள் அமெரிக்க கடல் எல்லையை நெருங்குவதாக கூறப்படுவது குறித்து சந்தேகம் தெரிவித்தார். ஆனால், சர்வதேச கடற்பரப்பில் இயங்குவதற்கு கப்பல்களுக்கு சுதந்திரம் உள்ளதாக அவர் தெரிவித்தாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments