உலக தமிழர்களையெல்லாம்
பரபரப்புக்குள்ளாக்கிய யுவன், எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை.
அண்மையில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின்
பிரஸ்மீட்டிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற
கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே?
அப்படியே இன்னுமொரு காரணமும் இருக்கிறதாம்
அதில். அவர் புதிதாக தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் அவர்
வெளியில் காட்சியளிக்கும்போது நிறைந்த தாடியுடன் ஒரு முழு இஸ்லாமியராகதான்
தோற்றமளிப்பாராம். சரி… இருக்கட்டும். நாம் சொல்ல வருவது இதையெல்லாம் விட
முக்கியமான விஷயம். யுவனை தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில
நடிகர்கள் இஸ்லாமியத்தை தழுவப் போகிறார்களாம். இவர்கள் அத்தனை பேரும்
யுவனின் நண்பர்கள் என்பதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
அதில் இரு ஹீரோக்களைப் பற்றி நேரடியாக
சொல்ல முடியாவிட்டாலும் கிசுகிசுவாக சொல்லிவிடுகிறோம். புரிந்து கொள்வது
எளிதுதான். அப்பா பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல்
படமே ஜெயம் அடைந்ததால் இன்றைய தேதியில் கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர்.
அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே
வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு
இஸ்லாமியராக மாறப் போகிறாராம். இவருக்கு நம்பிக்கை கொடுத்து நகர்த்தி
வருவது யுவன்தான் என்கிறது ரகசியமான தகவல் ஒன்று.
இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை
இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறார். இரண்டெழுத்து ஹீரோவான
இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியா சித்தரிந்து வந்தது. இவர்கள்
இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில்
பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று
கூறிவருகிறார்களாம்.
காலம் இன்னும் எத்தனை மாற்றங்களை சந்திக்க தயாராக இருக்கிறதோ?
0 Comments