Advertisement

Main Ad

ஜனாதிபதி மாடு அறுப்பதை ஒரு வாரத்திற்குள் நிறுத்த வேண்டும்! 499 பேர் உயிர்த்தியாகம் செய்வோம்!!


20140210-202126.jpgநாட்டில் இடம்பெறும் மாடறுப்பு உட்பட மிருகவதையை ஒரு கிழமைக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தடுத்து நிறுத்தாவிட்டால் இன்னும் 499 பேர் உயிர்த்தியாகம் செய்யவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிருகவதையை எதிர்த்து கடந்த வருடம் தலதா மாளிகையின் முன் உயிர்த்தியாகம் செய்த போவத்தே இந்திர ரத்ன தேரர் தெரிவித்தபடி தாம் ஒரு சங்கம் அமைத்துள்ளோம். அச்சங்கத்தில் 500 பேர் உள்ளனர். அதில் ஒருவரே மேற்படி இந்திரரத்ன தேரர். அவர் மிருகவதைக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்தார்.
இன்னும் ஒரு கிழமைக்குள் ஜனாதிபதி நாட்டில் இடம்பெறும் மிருகவதையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மீதமிருக்கின்ற 499 பேரும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிவரும் என மிருக வதைக்கு எதிராக கண்டியில் பாரிய ஆர்பாட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கள ராவய அமைப்பு இன்று(09) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பித்த இப்பேரணி 16 ம் திகதி ஜனாதிபதி மாளிகையின் முன்பாக நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் சிங்கள ராவய அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ள நிலையிலும், சிங்கள ராவய அமைப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், இலங்கையில் பிறமத தடை சட்ட மூலம் உடன் கொண்டு வரப்பட வேண்டும். இலங்கையிலுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். மாடறுப்பு உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
20140210-202126.jpg

Post a Comment

0 Comments