(அஷ்ரப் ஏ சமத்)
திருகோணமலை, இயற்கைத் துறைமுகமாகவும் வர்த்தக கேந்திரமாகவும் உள்ளது. திருகோணமலை என்றால் புனித மலையிப் பிரதேசம் எனப் பொருள்படும். (திருகோணமலை) முக்கோணவடிவில் அமைந்துள்ள மூன்று மலைகளைத் தொடா்புபடுத்தி திருகோணமலை என்ற பெயா் வந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 56941 குடியிருப்புக்கள் உள்ளன. இவற்றில் தற்காலிக வீடு 6379, தென்னை ஓலை வீடு 1753, தகரங்கள் இடப்பட்ட விடுகள் 6293, சாந்து புசப்பட வேண்டிய வீடுகள் 20772, பாதியளவில் நிர்மாணிக்கப்பட வேண்டிய வீடுகள் 7246, வீடொன்றை நிர்மாணிக்க காணி ஒன்று காணப்படாத வீடற்ற குடும்பங்கள் 7335, வேறு பிரதேசத்தில் வசிக்கும் தற்காலிக வாடகை-குத்தகை வீட்டில் இருக்கும் குடும்பங்கள் 1343, நிலையாக குடியேறுவதற்காக வாடகை குத்தகை 799 தொழில் நிமித்தம் வாசஸ்தலத்தில் வசிக்கும் குடும்பங்கள் 355 ஆககும்்.
இன வன்செயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 36000 வீடுகள் சேதமாக்கப்பட்டிருந்த நிலையில் அதிகார சபை 18509 வீடுகள் புணருத்தாபணம் செய்து மக்களுக்கு மீள கையளித்துள்ளது.
வள்ளுவர் கோட்டம் மாதிரிக் கிராமம்
தமிழ் இலக்கியத்தில் அதி உன்னத இடத்தினை வகிப்பது திருக்குரல் எனும் கிரந்தமாகும். தமிழர்களால் மட்டுமல்ல் தமிழ் பேசுபவா்களுக்கு மட்டுமல்ல பிறமொழிகளிலும் இக்குரல் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட 133 விடயங்களின் கீழ் 1330 குரல்களை உள்ளடக்கியுள்ளது. 300-600 ஆண்டுகளுக்கு ்இடைப்பட்ட காலத்தில் தற்போதைய சென்னையில் மைலாப்புர் கிராமத்தில் பிறந்த வள்ளுவா் பெருந்தகைகளாவா்.
இவ்வாறான ஒரு சிரேஷ்ட மகான் ஒருவரின் பெயரில் வள்ளுவா் கோட்டம் மாதிரிக் கிராமம் பெயர் சூட்டப்பட்டு இக் கிராமத்தினை கடந்த வாரம் அமைச்சா் சஜித் பிரேமதாச திறந்து வைத்தது. அன்னாருக்கு வழங்கும் கௌரவமாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி - பெரியகுளத்தில் 25 வீடுகளைக் கொண்ட வீடமைப்புக் கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அரச அதிபா் மற்றும் பிரதேச செயலாளா் அவா்களின் பங்களிப்புடன் அரச காணி துண்டைப் பெற்று குறைந்த வட்டி வீதத்தில் கடன் தொகையையும் வழங்கி அடிப்படை வசதிகளையும் கொண்ட ஒரு மாதிரிக்கிராமத்தையே அமைத்துக் கொடுப்பது வீடமைப்பு அமைச்சின் கருத்திட்டமாகும்.
இவ் வீடமைப்புத்திட்டத்தில் காணி, வீடு இல்லாதவா்கள் யுத்தத்தினால் கணவனை இழந்தவா்கள் ,வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தவர்கள்களுக்கு அரச காணித்துண்டுகள் வழங்கப்பட்டு அவர்களது பங்களிப்போடு இவ் வீடமைப்புத்திட்டததினை திருகோணமலை மாவட்ட முகாமையாளாின் மேற்பாா்வையில் நிர்மாணிக்ப்பட்டுள்ளது. இவ் வீடமைப்புத்திட்டத்தில் உள்ளுரர் பாதைகள், குடிநீர், மிண்சாரம் போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு்ளளன.


0 Comments