கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவை உத்தியோகபூர்வமாக மாகாண சபைக்கு வரவேற்கும் நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் கிழக்கு மாகாண சபையில் இன்று இடம்பெற்றது,
இதன் போது கிழக்கு மாகாண அவைத் தலைவர்,அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் இதன் போது பங்கேற்றனர்.
வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர் இடம்பெற்ற சபை அமர்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை ஆளுனரால் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன,
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரால் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் மற்றும் பட்டதாரிகளின் நியமன விடயங்கள் தொடர்பிலும் ஆளுனர் விசேடமாக சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது
0 Comments