Advertisement

Main Ad

பிரதி அமைச்சர் ஹரீஸினால் மருதமுனை பிரான்ஸ் சிட்டி வடிகான் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைப்பு


(அகமட் எஸ். முகைடீன்)

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கிட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மருதமுனை பிரான்ஸ் சிட்டி வீட்டுத்திட்ட வடிகான் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (18) மருதமுனை பிரான்ஸ் சிட்டி மஸ்ஜிதுர் றய்யான் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.ஆர்.எம். முஸ்தகீம் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, பொறியியலாளர் ரீ. சர்வாணந்தன், சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.சி. அன்சார், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம். றகீப், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, மஸ்ஜிதுர் றய்யான் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த வேலைத்திட்டமானது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் 18 மில்லியன் ரூபா முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில் இரண்டரை கிலோமீற்றர் தூரத்திற்கான வடிகான் அமைக்கப்படவுள்ளது. இதனால் இப்பிரதேச மக்கள் மழைகாலத்தில் வெள்ளநீர் வடிந்தோடமையினால் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் இல்லாமல் செய்யப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  

Post a Comment

0 Comments