Advertisement

Main Ad

சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை மைதானத்தில்

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks


புனர்வாழ்வு அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி, மலிவு விற்பனைக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ஈட்டுக் கொடுப்பனவுக் காசோலை வழங்கல் என்பன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை  மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஞாயிறு காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன், இராஜாங்க அமைச்சரின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன் கௌரவ அதிதியாகவும், சிறப்பு அதிதயாக மட்டு மாவட்டச் செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். 

Post a Comment

0 Comments