மட்டக்களப்பு, பழுகாமம், தும்பங்கேணி பிரதான வீதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
பழுகாமத்திலிருந்து தும்பங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வானகமும், தும்பங்கேணிப் பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியத்திலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கனரக வாகனத்தின் கீழ் அகப்பட்டு, பலத்த பிரயத்தனத்தின் பின்னரே மீட்கப்பட்டுள்ளார்.
இதில் பலத்த காயங்களுக்கு மத்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பழுகாமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய அரசரெத்தினம் விஜிதரன் என்பவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வ.சக்திவேல்
0 Comments