காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்தோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 5 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்போருக்கு தற்போது 2 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கான பிரேரணையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டார்.
காட்டு யானைகளின் தாக்குதல்களால் வருடாந்தம் சுமார் 75 பேர் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments