சாய்ந்தமருது பழைய தபாலக வீதியைச் சேர்ந்த முன்னாள் HNB உத்தியோகத்தரும் தற்போதைய DFCC வங்கி முகாமையாளருமான ஏ.ஆர்.எம்.ஹசான் & மக்கள் வங்கி உத்தியோகத்தர் இஸ்ஸத் றீஷா ஆகியோரின் மூத்த புதல்வர் ஹூஸைப் ரஷா (வயது-08) அவர்களின் ஜனாஸா இன்று சுபஹ் தொழுகையை தொடர்ந்து அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.
பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் உம்மம்மாவின் பராமரிப்பில் இருந்த தனது இளைய சகோதரனுடன் வீட்டின் மேல் மாடியில் ஷோல் எனும் துப்பட்டையை கார்ட்டூன் படத்தில் செய்வது போன்று சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது கழுத்து இறுகி பரிதாபகரமாக இச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (22) சுபஹ் தொழுகையுடன் சாய்ந்தமருது ஒஸ்மன் வீதி அக்பர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை பரிசளிக்க இருகரம் ஏந்தி இறைவனை பிரார்த்திப்போம்
MOHAMED IRSHATH
0 Comments