(அஷ்ரப் ஏ சமத்)
இந்த நாட்டின் மருத்துவக் கல்வியை சர்வதேச தரத்திற்கும் நாளாந்தம் இந்த நாட்டில் வைத்தியா்கள் தேவை என உணா்ந்துதான் 2007ஆம் ஆண்டில்
அதற்கமைவாக நான் 1.6 பில்லியன் ருபா செலவழித்து இந்த சைட்டம் பல்கலைக்கழகத்தினை ஆரம்பித்தேன். நான் இப் பணத்தினை சூது அல்லது களப் - ஹோட்டல்கள் முதலிட விரும்பவில்லை. கல்விக்காகவே நான் இந்தப் பணத்தினை முதலிட்டேன் அதற்காக டொக்டா் நெவில் பெர்ணான்டோ என்ற வைத்தியசாலை ஒன்றையும் ஆரம்பித்துள்ளேன். என டொக்டா் நெவில் பெர்ணான்டோ தெரிவித்தாா.
மாலேபேயில் உள்ள சைட்டம் தணியாா் மருத்துவக் கல்லுாாியின் ஸ்தாபகா் தலைவருமான டொக்டா் நெவில் பெர்ணான்டோ வும் மற்றும் அங்கு போதிக்கும் மருத்துவ பேராசிரியா்களினது இன்று(7) கொழும்பு. பி.எம.ஜ.சி.எச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாடாடொன்றை நடாத்தினாா்கள் அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
டொக்டா் நெவில் பெர்ணான்டோ மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் -
2007ஆம் ஆண்டு உயா்தரப் பரீட்சை முடிபு வெளியானபோது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்களுள் 18ஆயிரம் மாணவா்கள் மட்டுமே சட் ஸ்கோா் புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகம் சென்றனா். முன்னாள் உயா் கல்விஅமைச்சா் காலம்சென்ற பேராசிரியா் வர்ணபால என்னை அழைத்து மருத்துவத்துறையில் முதலிட்டு ஒரு கல்வியை ஆரம்பிக்கும்படி ஆலோசனை வழங்கினாா் . எமது மாணவா்கள் மருத்துவக் கல்விக்காக பங்களதேஸ், பாக்கிஸ்தான் ரசியா போன்ற நாடுகளில் செல்கின்றனா். வருடாந்தம் இலங்கைப் பணம் 5000 மில்லியன் ருபாவுக்கு மேல் வெளிநாடுகளுக்குச் செல்கின்றது. அத்துடன் இம் மாணவா்கள் தமது பெற்றோரை பிரிந்து, மொழி கலாச்சாரம் இல்லாத நாடுகளுக்குச் தணிமையில் இக் கல்வியை பயில்வதை விட எமது நாட்டிலேயே சிறந்த மருத்துவ விரிவுரையாளா்கள் பேராசிரியா்கள் உள்ளனா். அவா்களை உபயோகித்து சர்வதேச தரத்திற்கான ஒரு மருத்துக் கல்லுாாியையே நான் அமைத்துள்ளேன்.
இதனை தற்போது அரசியல் வாதிகள் தமது தணிப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளுக்காக மாணவா்களையும் மருத்துவ கவுண்சில்களையும் வீதிக்கு இறக்கி ஆர்பாட்டங்களை நடாத்துவதை ஊடகங்கள் ஊடாக காணக்கூடியதாக உள்ளது. பங்களதேஸ் நாட்டில் கூட தணியாா் மருத்துவக் கல்லுாாி இருக்கும்போது ஏன் எமது நாட்டில் இருக்கக் கூடாது. என கேட்க விரும்புகின்றேன். ?
அதற்கமைவாக நான் 1.6 பில்லியன் ருபா செலவழித்து இந்த சைட்டம் பல்கலைக்கழகத்தினை ஆரம்பித்தேன். அதற்காக சுகாதார அமைச்சினல் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை அத்துடன் முதலீட்டு ஊக்குவிப்பு சபையுடன் இரண்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டேன். இந்த நாட்டில் உள்ள மருத்துவப் பலக்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியா்கள் வருகை தர விரிவுரையாளா்களும், சிலா் நிரந்தர விரிவுரையாளா்களாகவும் நியமித்து ஒரு சிறந்த மருத்துப பட்டத்தினை எமது சைட்டம் நிறுவனம் வழங்குகின்றது. அத்துடன் பல்கலைகக்கழக மாணிய ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உயா் கல்வியமைச்சா் எஸ“.பி திசாநாய்கக தற்போதைய சுகாதார அமைச்சா் டொக்டா் ராஜித்த சோனாரத்தின தற்போதைய உயா் கல்வியமைச்சா் லக்ஷ்மன் கிரியல்ல, ஆகியோா் தணியாா் மருத்துவக் கல்லுாாியின் அவசியத்திற்கு தம்மாலான பங்களிப்பை செலுத்தியுள்ள்னா்.
நான் இப் பணத்தினை சூது அல்லது ஹோட்டல்கள் ஆரம்பிக்க வில்லை . இந்த நாட்டிற்குத் தேவையான மருத்துவ டொக்டா்களை உறுவாக்குவதற்கே என்னம் கொண்டேன். முன்னாள் ஜனாதிபதி மகிரந்த ராஜபக்ச கூட என்னை அழைத்து இலவசமாக புலமைப்பரிசில் மூலம் 10 மாணவா்களுக்கு மருத்துவக் கல்லுாாிக்கு அனுமதி வழங்கும்படி கூறினாா். அவா்களுக்கு வழங்கினேன். அவா்கள் இப்பொழுத 3 ஆவது வருடம் வரை கற்கின்றனா். அரசியல வாதிகள் தமது சா்ந்தப்பத்திற்கேற்ப இந்த அரசாங்கத்தினை கவிழ்பதற்கு பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் மருத்துவ கவுண்சில் ஊடாக சைட்டத்தினை கருப்பொருளாக வைத்து விளையாடுகின்றனா்.
இக் கல்லுாாியில் பயிலுவதற்கு உயா்தரத்தில் 2 சீ (திறமைச்சித்தி) 1 எஸ். (சாதாரணசித்தி) தகமையாகக் கொள்ளப்படுகின்றது. கடந்த இரு வருடமாக மருத்துவக் கவுண்சில் இங்கு வெளியான மாணவா்களை பதிவு செய்து 1 வருட பயிற்சியை முடிப்பதற்கு மறுக்கின்றனா். அதற்காகவே மேன்முறையிட்டு நீதிமன்றத்தினால் இலங்கை மருத்துவ சம்மேளனத்திற்கு வழங்க்பட்ட பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு தீர்ப்பை சைட்டம் வரவேற்றுள்ளது.
இலங்கையின் கல்விச் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடிய சைட்டம் போன்ற நிறுவனங்கள் மற்றும் நாட்டு மக்களின் உரிமைகளுக்கு கிடைத்த கௌரவிப்பாக இந்த தீர்மானம் அமைந்துள்ளது என டொக்டா் நெவில் பெர்ணான்டோ தெரிவித்தாா்.
தற்போது சில தரப்பினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிரான வாதமான மருத்துவ பட்டதாரிகளின் தரம் மற்றும் நியமனங்களை பேனுவதில் பிரச்சினைகள் குறித்து நாம் மிகவும் கவலையடைகிறோம். நாட்டில் உயா் தரம் வாய்ந்த தனியாா் மருத்துவ கல்வி காணப்படல் வேண்டுமாயின் ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் நெருக்கமான மேற்பாா்வை மற்றும் கண்கானிப்பு செயற்பாடுகளை மேற்கொண்டு குறித்த நிறுவனங்களுக்கு உதவிகளை மேற்கொள்ள வேண்டியது இலங்கை மருத்துவ சங்கத்தின் பொறுப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற செயற்பாடுகள் சைட்டம் பெருமளவு வரவேற்கின்றது.
சைட்டம் யினால் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ் பட்டக் கற்கையானது சர்வதேச மருத்துவ கல்வியங்களினால் வழங்க்படும் கற்கைகளுக்கு நிகரானதாகவும், அவற்றை விட சிறந்தாகவும் அமைந்துள்ளதாக வைத்திய நெவில் பெர்ணான்டோed உறுதியளித்தாா்.
0 Comments