Advertisement

Main Ad

அம்பாறை மாவட்ட பறகஹாகலை பிரதேசத்தில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு நிலைய பொறுப்பதிகாரி காரியலயம் திறந்து வைப்பு


அபு அலா -

அம்பாறை மாவட்ட பறகஹாகலை பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் நிலைய பொறுப்பதிகாரி காரியலயம் இன்று (19) மு.காவின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் சிறியானி உள்ளிட்ட மு.காவின் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments