இன்ஷா அல்லாஹ் எதிர்வரவிருக்கின்ற மாகாணசபைத்தேர்தலில் முஸ்லிம்
காங்கிரஸ் கூட்டமைப்பின் வெற்றி உறுதி செய்யப்படவிருக்கிறது.
கூட்டமைப்பின் அம்பாரை மாவட்டப் பிரதான பங்காளி அதாவுல்லாஹ் கூடிய ஆசனங்களுடன் முதலமைச்சராக வருவதற்கான வாய்புக்களே அதிகம் உள்ளது.ஹக்கீம் காங்கிரஸ் கோட்டை என வர்ணிக்கப்படும் அம்பாறையில் கூட்டமைப்பு ஹக்கீம் காங்கிரஸை வீழ்த்தி அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளப்போவது உறுதி.
கடந்த பொதுத்தேர்தலின் பிரகாரம்ஹக்கீம் காங்கிரஸின் சிங்கள வாக்குகள்
போக , மீதி 70000 அடிப்படை வாக்குகளைக் கொண்ட ஹக்கீம் காங்கிரஸை அடிப்படை வாக்குகளாக சுமார் 50000 வாக்குகளை (33000+17000)கொண்ட கூட்டமைப்பு எதிர் கொள்ளப் போகிறது.
ஹக்கீம் காங்கிரஸினை விட்டுப் பிரிந்த முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பின்பிரதினிதிகள் அனைவரும் ஓரணியில்
வரவுள்ளதால் 20001 வாக்குகளுக்கே கூட்டமைப்பு உளைக்க வேண்டிய
தேவை உள்ளது. அதிலும் குறிப்பாக ஹக்கீம் காங்கிரஸில் இருந்து அதிர்ப்தியுற்ற பல உச்ச பீட உறுப்பினர்களும் முன்னாள்
தவிசாளர்களும் கூட்டமைப்பை நோக்கிப் படையெடுக்கவுள்ளதால் இலகுவான 10000 கும் மேற்பட்ட வாக்குகள் திசை திருப்பப்படும். மீதி 10001 வாக்குகளும் அதாவுல்லாவின் சேவை மற்றும் றிசாட்டின் உளைப்பு,பேரியலின் இழப்பு ,அமானின் தவிப்பு,ஹசனலியின் கொதிப்பு என்பவற்றுக்கு சன்மானமாக வழங்கப்படவிருக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்று தேசியப்பட்டியலில் அதிர்ப்தியுற்றிருக்கும்அட்டாளைச்சேனை , கடல் விழுங்கியும் கவனிப்பாரற்று இருக்கும் ஒலுவில் , மற்றும் அரசியல் அனாதையாக்கப்பட்டிருக்கும்பாலமுனை ,பொத்துவில் தொட்டு இறக்காமம் வரையான பிரதேசங்களும்சாணக்கியத்தின் சர்வாதிகாரத்தினால் மேயர் வாக்குறுதியளித்து ஏமாற்றப்பட்டிருக்கும் மருதமுனை ,நற்பிட்டிமுனை போன்ற ஊர்களும் நகரசபையில் வெறுப்புக்கொண்ட தருணத்துக்கு கருவறுக்கக் காத்திருக்கும் சாய்ந்த்தமருது மக்களும் சாணக்யத்துக்கு சாட்டையடி கொடுக்கக் காத்திருகிக்கின்றனர்.
இன்னும் இன்னும் ஏமாறத்தயாரில்லா நிலையில் மக்கள் இருப்பது பெரும்
தலையிடியாக ஹக்கீம் காங்கிரஸுக்கு
மாறும் அதே வேளை , இறுதி அஸ்திரம் முன்னாள் தவிசாளர் பஷீரிடம் தயாராகவே இருக்கிறது. மேலும் ஹக்கிம் காங்கிரஸினால் மீட்டுக்கொள்ளமுடியாத தோல்வியில் சோபையிழந்து காணப்படும்
மட்டக்களப்பு திருகோணமலை இரண்டையும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு இலகுவில் கைக்கொள்ளும் இன்ஷாஅல்லாஹ்.அரசுடனோ அன்றி தமிழ் தேசியகூட்டமைப்புடனோ பேச்சு வார்த்தைகளுக்கு அப்பால் அதிக ஆசனங்களுடன் அதாவுல்லாஹ்முதலமைச்சராக வீற்றிருக்க முஸ்லிம்காங்கிரஸ் கூட்டமைப்பு கிழக்கில் அரியாசனம் ஏறும். மிக விரைவில் திடுக்கிடவைக்கும் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
Shifaan Bm
0 Comments