வங்கதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சஹானா காதுன் என்பவர் ஒருவித அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுமியின் முகம், காது, நாடி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்துள்ளது.
சிறுமியின் தந்தை முகமது ஷாஜகான் கூலி வேலை செய்கின்றவர், இந்த நோய்க்கு டாக்காவில் உள்ள போதனா வைத்தியசாலையில் சஹானா சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த நோய் மரபணு சம்பந்தப்பபட்ட நோய் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வைத்தியர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர், இது ஒரு அபூர்வ நோய் என்றும், உலக அளவில் 6 பேர் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பெண் ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்வாறான நோய் ஏற்பட்டு அதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சையின் பின்னர் இந்த நோய் ஓரளவு குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்கதேச மர மனிதனுக்கு 16 அறுவை சிகிச்சைகள்: ஓராண்டின் பின் குணமானார்
0 Comments