காண்பதெல்லாம் அல்லது கேட்பதெல்லாம் அல்லது வாசிப்பதெல்லாம் சரி என்ற அனுமானத்தில் – அந்தச் செய்தியின் அல்லது தகவலின் நோக்கம் பற்றியோ – அதை வெளிப்படுத்தியுள்ளவர் யார்? அவரின் தனிமனித ஒழுக்கம் எப்படி? சமூகத் தாக்கம் எப்படி? என்ற எந்தவித மீளாய்வுகளே இல்லாமல் - கையில் போனோ, பேட்டோ, கம்ப்யூட்டரோ இருந்தால் – ஒரு மனிதனின் அந்தரங்கங்கள் வரை அசிங்கமாக எழுதும் படித்த நண்பர்களை என்னவென்று சொல்வது?
தனது கருத்தினை சொல்வதற்கு குர்ஆனையும் ஹதீசையும் உதவிக்கு அழைக்கத் தெரிந்தவர்களுக்கு - அதே குர்ஆனும் ஹதீஸும் தடுத்துள்ள தனிமனித மானத்தின் பெறுமானம் புரியாமல் போவது எப்படி?
அவதூறுக்கு அல்லாஹ் போட்டுள்ள தடைகள் தெரியாமல் போவது எப்படி? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் போதனைகள் பற்றி புரியாமல் போவது எப்படி?
‘’தௌவ்வா’’ செய்து மீண்டவர்களின் பாவங்களைப் பரிகசிப்பது அல்லாஹ்வுக்கு பிடிக்குமா? அதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதித்திருந்தால் எப்படி? எது வரை?
தாடியும் தொப்பியும் மனிதனுக்குப் பெறுமானம் சேர்க்காது. நிதானமும் தேடலுமே அதற்கான வழிகளைத் திறக்கும்.
ஒருபக்க நியாயங்கள்; தர்மமற்ற தண்டனை; மனித நாகரீகத்திற்கு எதிரானது என்பதையாவது எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னிக்கவும் மறைக்கவும் பிரார்த்திக்கிறேன்.
ஏ.எல்.தவம்
0 Comments