Advertisement

Main Ad

சோமாலியாவில் 4 பேர் தலையை துண்டித்து படுகொலை; அல் ஷபாப் பயங்கரவாதிகள் அட்டூழியம்


அந்நாட்டில் உள்ள ஜூபா பிராந்தியத்தை தங்களது கட்டுபாட்டில் வைத்திருக்கும் அவர்கள் அங்கு தன்னாட்சி நடத்தி வருகிறார்கள்.

அவர்களது இயக்கத்தை சேர்ந்த முகமது அபு அப்தல்லா என்பவர் அந்த பிராந்தியத்தின் கவர்னராக உள்ளார்.

அல் ஷபாப் இயக்கத்துக்கு என தனி கோர்ட்டு உள்ளது. அந்த பிராந்தியத்திற்கு உட்பட்டவர்கள் மீது ஏதும் குற்றச்சாட்டு எழுந்தால் அதனை இந்த கோர்ட்டு விசாரித்து அவர்களுக்கு தண்டனை வழங்கும்.

இந்தநிலையில், அந்த பிராந்தியத்தை சேர்ந்த ஆண்கள் 4 பேர் அரசுக்கு உளவாளியாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டனர். இதன் மீதான விசாரணை ஜமாமி மாவட்டத்தில் உள்ள அல் ஷபாப் கோர்ட்டில் நடந்தது.

விசாரணையில், அவர்களது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்றுமுன்தினம் அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஜமாமி மாவட்டத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் வைத்து அவர்கள் 4 பேரின் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.

Post a Comment

0 Comments