Advertisement

Main Ad

அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலியா  அணி சார்பில்  கிலிங்கர் 62 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஆரோன் பின்ச் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பென் டன்க் 28 ஓட்டங்கள்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் தசுன் சானக மற்றும் லசித் மலிங்க தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

சீகுகே பிரசன்ன ஒரு விக்கட்டை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஒட்டங்களாக டில்சான் முனவீர 37 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

மிலிந்த சிறிவர்தன 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

அவுஸ்திரேலியா அணிசார்பில் பந்துவீச்சில் ஜேம்ஸ் போக்னர் , எடம் சம்பா ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியா அணியின்  எடம் சம்பா தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , தொடராட்ட நாயகனான இலங்கை அணியின் அசேல குணரட்ன  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , மூன்று போட்டிகளை கொண்ட இத்தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 

Post a Comment

0 Comments