தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உட்பட பல முஸ்லிம் நாடுகளிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து சுமார் இரண்டு இலட்சம் பேர் இலங்கையில் தங்கி தீவிரவாதத்தைப் போதித்து வருகின்றார்கள்.
இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமென பொதுபலசேனா அமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
பொதுபலசேனா அமைப்பு இச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.எம்.ரணசிங்கவைச் சந்திக்கவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 10 தேரர்கள் இச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
-ARA.Fareel-
0 Comments