(பழுலுல்லாஹ் பர்ஹான்)
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகரின் பிறந்த தின நிகழ்வுகள் 22-02-2017 நேற்று புதன்கிழமை நடைபெற்றன.
மட்டக்களப்பு மகாத்மா காந்திப் பூங்காவில் இருந்து ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு நீரூற்று பூங்காவிலுள்ள சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவலின் உருவச்சிலை அருகாமையில் நிறைவுபெற்றது.
அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் சாரண கொடி என்பன ஏற்றப்பட்டதுடன், சாரணர் தந்தை பேடன் பவுலின் உருவச்சிலைக்கு அதிதியாகக்கலந்து கொண்ட மட்டக்களப்பு மெதடித்த மத்திய கல்லூரியின் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜால் கழுத்துக் கொட்டை அணிவிக்கப்பட்டது.
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகரின் பிறந்த தின நிகழ்வில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, வின்சன்ற் மகளிர் தேசியப் பாடசாலை, புனித சிசிலியா தேசியப் பாடசாலை, வை.எம்.சி.ஏ. சாரணர் குழு, கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம், சிவானந்தா தேசியப்பாடசாலை ஆகியவற்றின் குருளைச்சாரணர்கள். இளைஞர் சாரணர்கள், பெண் சாரணர்கள், திரி சாரணர்கள் உட்பட சாரண ஆசிரியர்கள் அடங்கலாக 500 சாரணர்கள் பங்கு கொண்டன.
உலகில் சமாதானத்தினை பரப்பும் வகையில், 1907ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கிறின் தீவில் 20 சிறார்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பேடன் பவுளின் மனைவி லோறா பேடன்; பவுளினால் பெண்கள் சாரணர் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. முதன் முதலாக யுத்தத்தினால் மன நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்பட்டிருந்தார்கள். உலகின் 147 நாடுகளில் 25 மில்லியன் பேர் சாரண இயக்கத்தில் அங்கத்தவர்களாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments