(எஸ்.அஷ்ரப்கான்)
மாலைதீவில் தங்கி இருந்த மீனவர்கள் 06 பேரில் 4 நபர்கள் (19.02.2017) 06.30 மணியளவில் மாலைதீவில் இருந்து விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைத்துள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். நஸீர் தெரிவித்தார்.
இதே வேளை ஏனைய இரு மீனவர்களின் கையொப்பம், மற்றும் சிறு தவறு காரணமாக மாலைதீவு விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் நாட்டுக்கு வருவர் எனவும் நஸீர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு மீனவர் சமுகம் நேற்று (19) அக்கரைப்பற்று வதுர் நகரில் கெளரவ தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை நேரில் சந்தித்து தாங்கள் செய்த பணஉதவி மற்றும் மாலைதீவு அரசாங்கத்தோடும், இலங்கை அரசாங்கத்தோடும் தொடர்புகளை ஏற்படுத்தி மீனவர்களை மிக விரைவாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் வருகின்ற போதல்லாம் எங்களுக்கு உதவி செய்தமைக்காகவும் மற்றும் அம்பாரை மாவட்ட ஆழ்கடல் மீன்வர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் உரிய நேரத்தில் தீர்த்து வைத்தமைக்காகவும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் விசேடமாக இம்மீனவர்களை கடலில் இருந்து தத்தளித்த போது காப்பாற்றி நல்ல முறையில் கவனித்து தாய் நாட்டுக்கு அனுப்பிய மாலைதீவு கடற்படைக்கும் அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சார்பாகவும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
0 Comments