Advertisement

Main Ad

சம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகம் சம்பியன் . photos

(எம்.எம்.ஜபீர்)
12ஆம் கொளனி கத்ரினா விளையாட்டுக் கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவு  மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியியில் சம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
இச்சுற்றுப்போட்டி 7ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 9வீரர்கள்  கொண்ட இறுதி சுற்றுக்கு தெரிவான சம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகமும் சம்மாந்துறை அல்-ஹம்றா விளையாட்டுக் கழகமும் தெரிவானது. நாணையச் சுழச்சியில் வெற்றிபெற்ற அல்-ஹம்றா விளையாட்டுக் கழகம் நியூ சன் விளையாட்டுக் கழகத்தை முதலில் துடுப்படுத்தாடபணித்தது. முதலில் துடுப்படுத்தாடி நியூ சன் விளையாட்டுக் கழகம் 7ஒவர் நிறைவில் 2விக்கெட்களை இழந்து 101 ஒட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய அல்-ஹம்றா விளையாட்டுக் கழகம் 6.3ஒவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 31 ஒட்டங்களை பெற்றது.

இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற சம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகத்தை  சேர்ந்த எம்.ஐ.சாக்கீர் தொடர் ஆட்டநாயகனாகவும், அதே கழகத்தை சேர்ந்த ஏ.எச்.சிபான் போட்டியின் சிறந்த ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வு கத்ரினா விளையாட்டுக் கழகத்தின் தலைவர்  எஸ்.எம்.பசீல் தலைமையில் 5ஆம் கொளனி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்   பிரதம அதிதியாக நாவின்வெளி பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபீவுள்ளாஹ் கௌரவ அதிதியாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் அதிதிகளாக மெஸ்ரோ அமைப்பின் உயர் பீட உறுப்பினரும் நாவிதன்வெளி அமைப்பாளருமான  ஏ.எம்.மஹ்றூப், அல்-அமான சமூக சேவை அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.வீ.நபாஸ்,  விளையாட்டு கழகத்தின் மூத்த வீரர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற நியூ சன் விளையாட்டுக் கழகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் காசோலையும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாம் இடத்தை பெற்ற அல்-ஹம்றா விளையாட்டுக் கழகத்திற்கு ஐயாயிரம் ரூபாய் காசோலையும் கிண்ணமும் கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.





Post a Comment

0 Comments