Advertisement

Main Ad

அமைச்சர் றிஷாதின் பித்தளை தொடர்பான அமைச்சர் ஹக்கீமின் குற்றச் சாட்டும் அமைச்சரவை பத்திரமும்




அமைச்சர் றிஷாத் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.இதன் பின்னணியில் மு.காவைச் சேர்ந்த சிலரும் மு.கா சார்பு ஊடகங்கள் சிலவை இருப்பதும் கண்கூடு.11-11-2016ம் திகதி புத்தளத்தில் பாயிசை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் சற்று உணர்ச்சிவசப்பட்டு (தான் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்ததை  சாய்ந்தமருதில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்) அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

11-12-2016ம் திகதி அதிர்வு நிகழ்ச்சியில்  கலந்துகொண்டிருந்தஅமைச்சர் றிஷாதிடம் ,அமைச்சர் ஹக்கீம் முன் வைத்த ஊழல் குற்றச் சாட்டுக்கள் அடங்கிய காணொலி காண்பிக்கப்பட்டது.இதன் போது அமைச்சர் றிஷாத் அமைச்சர் ஹக்கீம் ஒரு உண்மையான முஸ்லிமாக இருந்தால் அதனை நிரூபிக்குமாறு கூறியிருந்தார்.அதனை பகிரங்கமாக நிரூபிக்கும் நேரம் அமைச்சர் ஹக்கீமிற்கு நேற்று18-12--2016ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கிடைத்திருந்தது.

குறித்த நாள் அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் வைத்து அமைச்சர் றிஷாத் பித்தளை மற்றும்குளம்அமைப்பு போன்றவற்றில் ஊழல் செய்திருந்ததாக கூறியிருந்தார்.இதில்வடக்கில் குளத்தை காணவில்லை என்ற குற்றச் சாட்டை அமைச்சர் ஹக்கீம் நிரூபிப்பது மிகவும் இலகுவானது.இந்த இடத்தில் இந்த காலத்தில் குளம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால்,தற்போது அப்படி ஒரு குளம்அங்கில்லை என்றால் அமைச்சர் றிஷாத் மிக இலகுவாக மாட்டிக்கொள்வார்.அமைச்சர்றிஷாத் அமைச்சர் ஹக்கீமிற்கு சவால் விட்ட குறித்த நிகழ்ச்சியில்  குறித்த ஏதாவது ஒரு இடத்தில் குளத்தை காணவில்லை என அமைச்சர் ஹக்கீம்கூறட்டும் பார்க்கலாம் என சவால்விட்டிருந்தும்குளத்தை காணவில்லை என்ற குற்றச் சாட்டின் பக்கம் அமைச்சர் ஹக்கீமின் வாய் சிறிதும் செல்லாமை அப்படி ஒன்று நிகழவில்லை என்பதை தெளிவாக்குகிறது.

இருந்தாலும் பித்தளை விடயத்தில் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததாக நிரூபிக்கஅமைச்சர் ஹக்கீம் சற்று முயற்சித்தாலும் மூக்குடைந்து போனார் என்பதே உண்மை.அண்மையில் ஒரு சகாய விலையில் பித்தளை மூலப் பொருட்களை கொள்வனவு செய்ய அமைச்சர் றிஷாத் அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்துள்ளார்.இதனை தான் எதிர்த்து தடுத்ததாக அமைச்சர் ஹக்கீம் கூறியிருந்தார்.இவ் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் அமைச்சர் றிஷாத் பாரிய ஊழல் செய்ய எத்தனித்தது போன்று கூறியுள்ளார்.

அமைச்சர் றிஷாத் பித்தளை தொடர்பாகசமர்பித்த அமைச்சரவை பத்திரம் என்ன?

கைத்தொழில் அதிகார சபையில் (IDB)300 பேர் அளவிலானபித்தளை,செம்பு,இரும்பு போன்றவற்றுடன் தொடர்புடையசிறு கைத்தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.இவர்கள்பித்தளை,செம்பு,இரும்பு போன்ற தங்களுக்கு  தேவையானனளவு மூலப்பொருட்களைகைத்தொழில் அதிகார சபையிடம் கோரிக்கை விடுப்பார்கள்.இலங்கையில் உள்ளஅமைச்சுக்களிடம்பித்தளை,செம்பு,இரும்பு போன்ற பொருட்கள் இருப்பின்  அவற்றை விற்க முன்பு கைத்தொழில் அதிகார சபையிடம் (IDB) இவைகளுக்கு உங்களிடம் தேவைகள் உள்ளதா என கேட்க வேண்டும்.குறித்த அதிகார சபை தேவையுள்ளது என பதில் அளிப்பின் குறித்த அமைச்சு கைத்தொழில் அதிகார சபையிடம் (IDB) அவைகள் வழங்கப்படல் வேண்டும்.அவ்வாறு வழங்கப்படும்பித்தளை,செம்பு,இரும்பு போன்றவைகள் வேறு நபர்களுக்கு வழங்கப்படாதுகுறித்தசிறு கைத்தொழிலாளர்களுக்கு மாத்திரமே விற்கப்பட வேண்டும்.இதுவே கைத்தொழில் அதிகார சபைச் (IDB) சட்டமாகும்.

எனினும் இந்த சட்டத்திற்கு மாறாக சில அமைச்சுக்கள் தங்களிடமுள்ள இவ்வாறான பொருட்களை தனித்தனியாக விற்கும் நடவடிக்கைகளைசெய்துவருகின்றன.இதன் காரணமாக சிறு கைத்தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.இது தொடர்பில் அவர்கள்கைத்தொழில் அதிகார சபைக்கு (IDB)அமைச்சர் றிஷாத் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அவரை அணுகி முறையீடும் செய்துள்ளனர்.

அமைச்சர் றிஸாத் குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்பிப்பதற்கு முன்பு அமைச்சின் செயலாளர்களை அழைத்து இது தொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளார்.இதன் போது அமைச்சுக்கள்கைத்தொழில் அதிகார சபையிடம் (IDB) குறித்தபித்தளை,செம்பு,இரும்பு போன்ற பொருட்களை வழங்குவதன் மூலம் சிறு கைத்தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை இலகுவாகபெற்றுக்கொள்வதுடன் அவர்களை இன்னும் ஊக்குவிக்கலாம் என தெளிவுபடுத்தியுள்ளார்.இதுவே அமைச்சரவை பத்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அறியாமலேயே அமைச்சர் ஹக்கீம் இதனை எதிர்த்து பேசியுள்ளார்.இதன் போது அமைச்சர் ஹக்கீமின் கோரிக்கைக்கு இணங்க ஆறு பேர் அடங்கலான குழு நியமிக்கப்பட்டிருந்தது.இதன் தலைவராக அமைச்சர் றிஷாத் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதில் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல,ரவூப் ஹக்கீம்,சரத் அமுனுகம,ரவி கருணாநாயக்க,எஸ்.பி திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.இக் குழு சில தடவைகள் கூடி ஆலோசனை நடாத்தியிருந்தது.இதன் போது பித்தளை செம்பு,இரும்பு ஆகியவற்றுடன்  தொடர்புடைய சிறு கைதொழிலாளர்கள் பாராளுமன்றம் அழைத்து வரப்பட்டு அவர்களிடமும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.இதன் போது அவர்களும் அமைச்சர் றிஷாத் முன் வைத்த அதே விடயங்களை கூறியுள்ளனர்.இதனை ஏற்றுக்கொண்ட குறித்த குழுவினரில் அமைச்சர் ஹக்கீமை தவிர மற்ற  அனைவரும் அமைச்சர் றிஷாதினால் முன் வைக்கப்பட்ட அவ் அமைச்சரவை பத்திரத்தில் ஒப்பமிட்டுள்ளனர் (இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளன).

அவ் அமைச்சரவை பத்திரம் மீண்டும் அமைச்சரவைக்கு சென்றுள்ளது.இதனைஅமைச்சர் ஹக்கீம்மீண்டும் எதிர்த்துள்ளார்.இதன் போது தலையிட்ட ஜனாதிபதி இதற்கு தனது தலைமையில் கூடி முடிவேடுப்போமென தீர்மானித்துள்ளார்.இப்படி இருக்கையில் இதனை அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததற்கான ஆதாரமாக கூற முற்படுவது ஏற்க முடியாத விடயமாகும்.அமைச்சரவையில் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கட்டு அது ஒரு அமைச்சரால் எதிர்பிற்கு உள்ளானாலும் சில காலம் கால தாமதமாவது வழமை.இதில் ஊழல் செய்ய என்னவுள்ளது?

அமைச்சரவைபத்திரத்தால் பாதிக்கப்படுவதுயார் ?

இவ் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்ப்படுமாக இருந்தால் அமைச்சுக்கள் தங்களிடமுள்ள குறித்த செம்பு,பித்தளை போன்றவற்றை விற்க முடியாத நிலை ஏற்படும்.இதன் மூலம் அமைச்சர்கள் இலாபமீட்டக்கூடிய சில வழிகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த குழுவில் உள்ள அனைவரும் அமைச்சர் றிஷாதின் அமைச்சரவை பத்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ள போதும் அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

மேலும் சில விடயங்கள்

அமைச்சுக்கள் தனித்தனியாக இரும்பு,செம்பு போன்றவற்றை விற்பனை செய்யும் போது அங்கு சிறு கைத்தொழிலாளர்கள் கொள்வனவுசெய்ய முடியாது.பெரும் முதலீட்டார்களே கொள்வனவு செய்ய முடியும்.பெரும் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் அமைச்சர் ஹக்கீம் அவர்களை பாதுகாக்க முனைகிறாரா?
சிறுகைத்தொழிலாளர்களுக்கு விற்கும் விலையில் அவர்கள் பாதிக்கப்படுவார்களாக இருந்தால் அதனை பேசி தீர்த்துக்கொள்ளலாம்.
அமைச்சர்பழைய மின் கலத்தினுள் ஈயம் ஊற்றுவதாக கூறி அமைச்சர் றிஷாத் செய்த ஊழல் சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்.அப்படியானால் ஆதாரம் இருந்தும் ஏன் அமைச்சர் றிஷாத் இது தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.
அமைச்சர் எங்கும் தன்னிடம் ஆதாரமிருப்பதாக கூறவில்லை.அனைவரும் கூறுகிறார்கள் நானும் கூறுகிறேன் என்ற பாங்கிலேயே பதில் அளிக்கின்றார்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை. 

Post a Comment

0 Comments