சீனாவின் மேற்கு பகுதியில் காஷ்கர் நகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில் நேற்றுமுன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 10.24 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் இருந்தும், பிற கட்டிடங்களில் இருந்தும் மக்கள் பதற்றத்துடன் வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நில நடுக்கத்தின் தாக்கம், வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துங்குவாவிலும் உணரப்பட்டதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் அங்கு உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
0 Comments