Advertisement

Main Ad

ஓர் இனத்துக்காக குரல் கொடுப்போரையும் இனவாதம் பேசுவோரையும் மக்கள் தௌிவாக அடையாளங் கண்டு கொள்ள வேண்டும் -கிழக்கு முதலமைச்சர்

ஓர் இனத்துக்காக குரல் கொடுப்போரையும் இனவாதம் பேசுவோரையும் மக்கள் தௌிவாக அடையாளங் கண்டு கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் தெரிவித்தார்


நேற்று முன்தினம் வாழைச்சேனையில் சமூக அமைப்புக்களுடனான சந்திப்பின் போது முதலமைச்சர் இதனைக் கூறினார்

இதன் போது முதலமைச்சரின் சமூகப் பணியினால் நன்மையடைந்த தமிழ் பெண்மணியொருவர் முதலமைச்சருக்கு நன்றி சொல்வதற்காக தமக்கு அன்றாட வாழ்வாதரத்தை தரும் கடையினையும் மூடிவிட்டு வந்து முதலமைச்சரை கண்டு கண்ணீர் வடித்தமை அனைவர் மனங்களையும் நெகிழ வைப்பதாய் அமைந்திருந்தது

கடந்த காலங்களில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சமூகங்கள்  திட்டமிட்டு பிரிக்கப்பட்டதை அறியாமல் தமது அரசியல் விருப்பங்களை வௌிப்படுத்துவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்

ஓர் இனத்தின் அபிலாஷைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை அந்த இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு இருப்பதை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை இனத்துக்காய் குரல் கொடுக்கும் போர்வையில் இனவாதம்  பேசுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது  என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்

மக்கள் புறக்கணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது சகாக்கள் இனவாதத்தை மக்கள் மத்தியில் பரப்பும் செயற்பாட்டை மும்மரமாக முன்னெடுத்து வருவதாக முதலமைச்சர் கூறினார்

அது மாத்திரமின்றி இந்த இனவாத செயற்பாடுகளில் புதிய யுக்திகளை கையாண்டு தமிழ் முஸ்லிம் மக்களிடையே பரஸ்பரங்களை காட்டி அவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்


எனவே அன்னம் பாலிலிருந்து தண்ணீரை பிரித்து எடுப்பதைப் போல இனவாதக் கருத்துக்களையும் இனத்துக்காக பேசும் கருத்துக்களையும் மக்கள் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வலியுறுத்தினார்



தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன மாகாண ரீதியிலும் தேசிய ரீதியிலும் இணக்கப்பாட்டுடனும் சுமுகமாகவும் அரசியல் உறவை பேணுவது போல் தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்கிடையேயான நல்லுறவை பேண வேண்டும்  என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்

Post a Comment

0 Comments