Advertisement

Main Ad

மாலத்தீவில் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அசின்

நடிகை அசினுக்கு நேற்று 31-வது பிறந்தநாள் ஆகும். இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலத்தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினார்.

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அசின். இவர் தமிழில் கஜினி, போக்கிரி, சிவகாசி, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்தி படங்களில் நடித்தபோது அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராகுல்சர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு அசின் நடிப்பில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தார்.

இந்தநிலையில் நடிகை அசினுக்கு நேற்று 31-வது பிறந்தநாள் ஆகும். இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலத்தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினார். அசினின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ராகுல்சர்மா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது வாழ்த்து செய்தியில் அழகுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், யாருமே சிறந்தவர்கள் இல்லை என்று யார் சொன்னது? என்று அசினை அவர் புகழ்ந்துள்ளார்.

Post a Comment

0 Comments