Advertisement

Main Ad

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து, சாரதிக்கு விளக்கமறியல்



(க.கிஷாந்தன்)

மதுபோதையில் வாகன அனுமதிபத்திரமின்றி தனது முச்சக்கர வண்டியை செலுத்தி இரு மாணவிகளை விபத்துக்குள்ளாக்கிய சாரதியை எதிர்வரும் 5.4.2016 வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் ருவன் த சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 31.3.2016 அன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொழும்பு பியகம பிரதேச நபரை பொலிஸ் விசாரணையின் பின் 1.4.2016 அன்று மாலை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது இந்த உத்தரவை நீதிபதி ருவன் த சில்வா வழங்கியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments