பிரதேச மாநிலம், போபாலில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 9 வயதான சிறுமி ஒருவர் அங்கிருக்கும் குழந்தைகளுக்காக சிறிய நூலகம் ஒன்றினை நடத்தி வருகிறார்.
போபாலின் அரேரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் 9 வயதான முஸ்கான் அஹிர்வார்.
இவர் தனது குடிசைப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அறிவினை வளர்க்கும் வகையில் நூலகம் ஒன்றினை நடத்தி வருகின்றார்.
தினமும் பள்ளியில் இருந்து வந்ததும் வீட்டிற்கு வெளியே தனது நூலகத்தினை அமைத்து மற்ற குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.
தன்னை போன்று மற்ற குழந்தைகள் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக நூலகத்தை நடத்தி வருவதாகவும் அந்தச் சிறுமி கூறியிருக்கிறாள்.
இந்த நூலகத்திற்கு அரசு அமைப்பான மாநிலக் கல்வி மையம் புத்தகங்களை வழங்கியிருக்கிறது.
0 Comments