Advertisement

Main Ad

நுவரெலியாவில் பாடசாலை மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்...photos

(க.கிஷாந்தன்)

(23.02.2016) அன்று மாலை நுவரெலியாவில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த சென் ஜோன்ஸ் கந்தப்பளை பகுதியை சேர்ந்த மாணவன் எம்.சுகிர்தன் (வயது 9) 24.02.2016 அன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாணவனின் உயிரிழப்பை தொடர்ந்து (24.02.2016) அன்று காலை பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் காணரமாக பாடசாலை சூழலில் அசாதாரண நிலை தோன்றியது. இதனை அடுத்து பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் மாணவர்கள் காலை 9.30 மணிமுதல் 11.00 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.விமலதாச நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முற்பட்டபொழுதும் அது முடியாமல் போய்விட்டது.

பின்பு அங்கு வருகை தந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம்,நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்களான எம்.சந்திரன், ஆர்.கேதீஸ் நுவரெலியா வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாச, உதவி கல்வி பணிப்பாளர்களான மோகன்ராஜ்,சோமசுந்தரம் பாடசாலை அதிபர் எம்.விஸ்வநாதன் மற்றும் பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி மாயவர்களால் விடுக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.விமலதாச வாக்குறுதி ஒன்றை வழங்கியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர்.

நுவரெலியா ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பாதுகாப்பு வேளியில் தனியார் பேருந்து ஒன்று (23.02.2016) அன்று மாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் குறித்த மாணவனும் பெண் ஒருவரும் காயத்திற்குள்ளான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.





Post a Comment

0 Comments