Ameenul Aslam

செம்மண்னோடை அல் ஹம்றா வித்தியாலயத்தின் முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்ட பாதுகாப்பு மதில் மற்றும் நுழைவாயில் ஆகியவற்றை பிரதி அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கைள கெளரவிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
ஆங்கிலத்தில் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய மாணவிக்கு பிரதி அமைச்சர் பொன்னாடை போர்த்தி கொளரவித்தார், அத்தோடு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
MS. சுபைதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் அஷ்ரப், சிரேஷ்ட விரிவுரையாளர் MTM. றிஸ்வி , பாடசாலை அதிபர்கள், கலாசார உத்தியோகத்தர் பீர்முஹம்மட் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.