Advertisement

Main Ad

குற்றவாளிகளை கைது செய்யவே மக்கள் எமக்கு இரு முறை ஆணை வழங்கினார்கள் - இம்ரான் மஹரூப் MP.!!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்


குற்றவாளிகளை கைது செய்யவே மக்கள் எமக்கு இரு முறை ஆணை வழங்கினார்கள் என தெரிவித்தார் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப். யோஸித ராஜபக்சவின் கைது தொடர்பாக தோப்பூரில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துவெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
கடந்த ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் ஆட்கடத்தல்கள் சொத்துகுவிப்பு போன்ற ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளை இல்லாமல் செய்து குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறியே நாம் மக்களிடம் ஆணையை கூறியிருந்தோம் . இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யவே மக்கள் எமக்கு இருமுறை ஆணை வழங்கினார்கள்.கடந்த ஒருவருட காலமாக நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் யோஸித ராஜபக்ச குற்றவாளியாக இனம்காணப்பட்ட பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைதை அரசியல் பழிவாங்கலாக சித்தரிப்பதுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்களும் சில சுதந்திர கட்சி அமைச்சர்களும் முயல்கின்றனர்.இது அரசியல் பழிவாங்கல் என்றால் தேர்தல் முடிந்த ஒரே நாளில் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதும் முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்டதையும் எவ்வாறு அழைப்பது.இன்று அரசியல் பழிவாங்கல் என்று கூறும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா சிராந்தி ராஜபக்சவுக்கு நடந்த அநீதிகளின் போது சிவப்பு சால்வைகளால் கண்களை மறைத்து கொண்டிருந்தனர்.
எமது அரசு அரசியல் ரீதியாக பழிவாங்க நினைத்திருப்பின் இன்று அரசியல் பழிவாங்கல் என கோஷம்போடும் பலர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனே வெளிக்கடைக்குள் தள்ளப்பட்டிருப்பர்.கைது செய்யப்பட முன் ஊழல்வாதிகளை இன்னும் ஏன் கைதுசெய்யப்படவில்லை என கேள்விஎழுப்பினர் கைதுசெய்தால் அரசியல் பழிவாங்கல் என கூறுகின்றனர்
இன்று (சனிக்கிழமை) எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்த்து நிதி மோசடி பிரிவை மூடுமாறு பெரும்தொகையான தேங்காய்களை உடைத்துள்ளனர் . இதற்கான தேங்காய்கள் அரச காணி ஒன்றில் இருந்து திருடப்பட்டதாக அறியக்கிடைத்தது . திருடர்களை காப்பாற்ற திருட்டு தேங்காய் உடைக்கிறார்கள் . இதை பணம் கொடுத்து வாங்கினால் குருநாகலிலுள்ள தேங்காய் வியாபாரிகளுக்காவது சிறிது இலாபம் கிடைக்கும் குருநாகலில் இருந்து அதிகூடிய விருப்பவாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் வாய்மூடி இருப்பவர்கள் இந்த உதவியையாவது அம்மக்களுக்கு செய்திருக்கலாம்.
ஊழல்வாதிகளும் கொலைகாரகளும் எவ்வாறான சதித்திட்டங்கள் தீட்டினாலும் நல்லாட்சியின் பயணத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.நாம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வளமான அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்க ஜனாதிபதிபிரதமரின் கீழ் மிகுந்த அர்பணிப்புக்களுடன் செயற்படுகிறோம்.இதன் பயனை விரைவில் மக்கள் அடைவார்கள் என கூறினார்.

Post a Comment

0 Comments