Advertisement

Main Ad

பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையைப் பார்த்தால் தமிழ் டெயஸ்போராவின் ஆதிக்கம் இந்த நல்லாட்சி அரசாங்கம் அவர்களின் சுருக்குக்குள் மாட்டிக் கொண்டுள்ளது

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின்  உரையைப் பார்த்தால் தமிழ் டெயஸ்போராவின் ஆதிக்கம் இந்த நல்லாட்சி அரசாங்கம் அவர்களின் சுருக்குக்குள் மாட்டிக் கொண்டுள்ளது என்பதையும்  அண்மையில் த.தே.கூ தலைவர் இரா.சம்மந்தன் அவர்களின் அராசாங்கத்தையே அச்சுறுத்தும் வகையிலான கருத்தையும் இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.


இருந்த போதிலும் இந்த புதிய உத்தேச அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக முஸ்லிம் கட்சிகள் ஆளுக்கொரு நிலைப்பாட்டை கொண்டுள்ளமையும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் இதுவிடயத்தில் அவசரப்பட்டு விடுமோ என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

இதற்கான காரணமாக கடந்த கால தான் தோன்றித்தனமான செயற்பாடுகளும்
தற்போது மர்ஹும் அஷ்ரப் அவர்களின் கருத்துக்கு முரணான செயற்பாடுகளும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளின் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளையும் உற்று நோக்கும் போது இவர்களும் தமிழ் டெயஸ்போராவின் பெருந்தொகை பணத்திற்கு விலை போய் விட்டார்களா? 

என்ற கேள்வியே எழுகிறது, அதே வேளை அமைச்சர் றிசாட் பதியுதீன் உடனான கட்சி இது விடயத்தில் இதுவரை எந்தவிதமான முன்நடவடிக்கைகளையோ அல்லது இது தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டையோ வெளிப்படையாக கூறாமல் இருப்பதால் இறுதியில் இவர்களின் கட்சிக் கொள்கை முரண்பாடுகளின் கௌரவ கொலைக்குள் முஸ்லிம் சமூகம் பழியாகிவிடுமோ என்ற அச்சம் மேன்மேலும் வழுவடைகிறது

எனவே புத்திஜீவிகள், சமூகத்தில் உள்ள அறிஞர் பெருமக்கள், உலமாக்கள் முஸ்லிம் சமூகத்தின் தற்கால  நிலைப்பாட்டை உணர்ந்து தங்களால் ஆன அழுத்தங்களை அதிகாரத்தில் இருக்கும் இவ்விரண்டு கட்சிகளுக்கும் பிரயோகித்து இது விடயத்திலாவது முஸ்லிம் தலைமைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயற்பட வழியுறுத்துமாறும் வேண்டுவதோடு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியும் வேண்டிக் கொள்கிறது

அஹமட் புர்கான்
ஊடக பேச்சாளர்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி

Post a Comment

0 Comments